Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

சமுத்திரக்கனி நடித்துள்ள ராமம் ராகவம் படத்தின் முதல் பாடல் வெளியீடு!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

சின்னத்திரையில் இயக்குனராக அறிமுகமான சமுத்திரக்கனி, அதன் பின்னர் “நாடோடிகள்” படத்தை இயக்கினார். இப்படம் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து “போராளி”, “நிமிர்ந்து நில்”, “அப்பா”, “நாடோடிகள் 2” போன்ற பல படங்களை இயக்கியுள்ளார்.

இந்நிலையில் சமுத்திரக்கனி, கடந்த சில ஆண்டுகளாக கதாநாயகனாகவும், பல்வேறு குணச்சித்திர வேடங்களில் நடித்துவருகிறார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் சமுத்திரக்கனி நடித்துள்ளார். சமீபத்தில், தெலுங்கு திரையுலகில் பிரபல நட்சத்திரங்களுக்கான வில்லன் கதாபாத்திரங்களில் அதிகம் நடித்து வருகிறார். அண்மையில் வெளியான “இந்தியன் 2” படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.

இந்நிலையில், தெலுங்கு நடிகர் தன்ராஜ் இயக்கும் “ராமம் ராகவம்” திரைப்படத்தில் சமுத்திரக்கனி நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகும் இந்த திரைப்படம் அப்பா மகன் உறவை அடிப்படையாகக் கொண்ட கதைக்களம் கொண்டுள்ளது. படத்தை தன்ராஜ் கொரனானி இயக்கியுள்ளார். படத்தின் முதல் பாடலான “குல சாமி போல” என்ற பாடல் வெளியாகியுள்ளது. இந்த பாடலை யுகபாரதி எழுதியுள்ளார், ஸ்ரீகாந்த் ஹரிஹரன் பாடியுள்ளார், இசையமைப்பை அருண் சிலுவேரு செய்துள்ளார்.

- Advertisement -

Read more

Local News