Wednesday, October 30, 2024

கோலாகலமாக நடந்த மலையாள சினிமா ராக்ஸ்டார் சுஷின் ஷ்யாம் திருமணம்..‌. பிரபலங்கள் பலரும் வாழ்த்து!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

மலையாளத்தில், ‘கிஸ்மத்’ திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் சுஷின் ஷ்யாம். தொடர்ந்து, கும்பளாங்கி நைட்ஸ், ட்ரான்ஸ், குருப், மாலிக், ரோமஞ்சம், மஞ்ஞுமல் பாய்ஸ், ஆவேஷம் போன்ற 20-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். சமீபத்தில் ஃபஹத் ஃபாசில் நடித்த போகன்வில்லா வெளியானது.

கடந்த சில ஆண்டுகளாக மலையாள சினிமாவில் பெரும் வரவேற்பைப் பெற்ற இசையமைப்பாளராக சுஷின் ஷ்யாம் எழுச்சியடைந்துள்ளார். பல முக்கியமான திரைப்படங்கள் அவரது நேரத்திற்காக காத்திருக்கின்றன.சுஷின் ஷ்யாம் இசையமைத்த பாடல்கள் மலையாளத்திலும் மற்ற மொழிகளிலும் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளன. ரோமஞ்சம் படத்தின் ‘ஆத்மாவே போ’, மஞ்ஞுமல் பாய்ஸின் ‘குதந்தரம்’, ஆவேஷமின் ‘இலுமினாட்டி’ போன்ற பாடல்கள் தமிழிலும் வெற்றி பெற்றவை.

இந்நிலையில், இன்று சுஷின் ஷ்யாம் தனது நீண்டநாள் தோழியான உத்தாரா கிருஷ்ணனை திருமணம் செய்துள்ளார். குடும்பத்தினரின் முன்னிலையில் கோவிலில் எளிமையாக நடைபெற்ற இத்திருமண விழாவில் நடிகர் ஃபஹத் ஃபாசில், நஸ்ரியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

- Advertisement -

Read more

Local News