Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

கேரளாவில் ரீ ரிலீஸாகிறது சூர்யாவின் கஜினி திரைப்படம் !

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -
LISTEN TO PLAY AUDIO NEWS?

பல பழைய வெற்றி படங்கள் சமீபகாலமாக ரீ ரிலீஸ் செய்யப்பட்டு வசூலை அள்ளி வருகின்றன. குறிப்பாக விஜய் நடித்த கில்லி படம் மீண்டும் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு கிட்டத்தட்ட 50 நாட்களை நெருங்கி உள்ளது. படம் ரிலீஸ் ஆனபோது வசூலானது போன்று மிகப்பெரிய தொகையையும் வசூலித்துள்ளது.

அதேபோல இன்னொரு பக்கம் அஜித்தின் மங்காத்தா மற்றும் தீனா போன்ற படங்களும் சமீபத்தில் அவரது பிறந்தநாளை முன்னிட்டு ரீ ரிலீஸ் செய்யப்பட்டன.இச்சமயத்தில் தற்போது சூர்யா நடிப்பில் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற கஜினி திரைப்படமும் வரும் ஜூன் 7 ஆம் தேதி மலையாளத்தில் ரீ ரிலீஸ் செய்யப்பட இருக்கிறது.

கஜினி படம் வெளியாகி கிட்டத்தட்ட 19 ஆண்டுகள் ஆகிவிட்டன. அதே சமயம் சூர்யாவின் பிறந்தநாளுக்கு இன்னும் இரண்டு மாதங்கள் இருக்கின்றன.ஆனால் படம் முன்கூட்டியே கேரளாவில் ஜூன் ஏழாம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

சமீபத்தில் விஜய்யின் கில்லி திரைப்படம் கேரளாவில் மிகப்பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றது‌ இதைதொடர்ந்து கஜினியையும் அதே போன்று ரீ ரிலீஸ் செய்தபின்னர் மிகப்பெரிய வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.சூர்யாவிற்கு கேரளாவிலும்‌ ரசிகர்கள் பட்டாளம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Read more

Local News