Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

கூலி படத்தில் அமீர்கான் நடிக்கிறாரா இல்லையா… தொடர்ந்து வெளியாகும் புது புது தகவல்கள்! #Coolie

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ரஜினிகாந்த் தற்போது ‘வேட்டையன்’ படத்தின் ரிலீஸில் பிஸியாக உள்ளார். ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் இப்படம் அடுத்த மாதம் 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. சில நாட்களுக்கு முன்பு, இப்படத்திலிருந்து “மனசிலாயோ” பாடல் வெளியிடப்பட்டு செம வைரலாகியுள்ளது. இதைத் தொடர்ந்து, இப்படத்தின் இரண்டாவது பாடல் செப்டம்பர் இறுதியில் வெளியிடப்படும் என்றும், இசை வெளியீட்டு விழா அக்டோபர் முதல் வாரத்தில் நடைபெறும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

‘ஜெயிலர்’ படத்தின் மூலம் மாபெரும் கம்பேக் கொடுத்த ரஜினி, ‘வேட்டையன்’ படத்திலும் மிகப்பெரிய வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் பின்னர், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் ‘கூலி’ திரைப்படத்தில் நடித்து வருகிறார் ரஜினி.

‘கூலி’ படத்தில் ரஜினியின் நண்பராக அமீர் கான் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. இதற்கிடையில், ரஜினி, அமீர் கானை ‘கூலி’ திரைப்படத்தில் நடிக்க வைத்து, ஹிந்தி திரையுலகில் ப்ரோமோஷன் செய்ய திட்டமிட்டுள்ளார் என்றும், இப்படத்தின் மூலம் ஆயிரம் கோடி வசூல் சாதனை பெற பிளான் போட்டு வருவதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

- Advertisement -

Read more

Local News