விஜய் தொலைக்காட்சியில் திங்கள்கிழமை முதல் சனிக்கிழமை வரை பிற்பகல் 1 மணிக்கு ஒளிபரப்பு செய்யப்பட்ட வந்த தொடர் பனி விழும் மலர் வனம்.இத்தொடருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. தொடரின் கதைக்களமும் விறுவிறுப்புடன் சென்றுக்கொண்டிந்த நிலையில், திடீரென இத்தொடர் முடிக்கப்பட்டது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கடந்தாண்டு ஜூன் 24-ல் தொடங்கப்பட்ட பனி விழும் மலர் வனம் தொடர் 219 எபிசோடுகளுடன் குறுகிய காலத்தில் நிறைவடைந்துள்ளது.
