ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ்குமார் இசையமைப்பில், அஜித், த்ரிஷா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள ‘குட் பேட் அக்லி’ படத்தின் டீசர் நேற்று வெளியாகியது. கடந்த மாதம் அஜித் நடித்த ‘விடாமுயற்சி’ திரைப்படம் வெளியான போதும், அது அவரது ரசிகர்களுக்கு முழுமையாக திருப்தி அளிக்காத சூழ்நிலை ஏற்பட்டது. இதனால், அஜித் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த படம் ‘குட் பேட் அக்லி’யாக இருந்தது.
நேற்று வெளியான டீசரில், அஜித்தின் பல்வேறு தோற்றங்கள் இடம்பெற்றுள்ளன, இது அவரது ரசிகர்களை அதிகம் உற்சாகப்படுத்தியுள்ளது. இதனால், டீசரை மீண்டும் மீண்டும் பார்த்து அதன் பார்வை எண்ணிக்கையை அதிகரித்து வருகிறார்கள்.

இன்னும் 7 மணி நேரம் உள்ள நிலையில், தற்போது அந்த டீசர் 25 மில்லியன் பார்வைகளை கடந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் திரைப்பட வரலாற்றில் இதுவரை வெளியான டீசர்களில், 24 மணி நேரத்தில் அதிகம் பார்வைகள் பெற்ற புதிய சாதனையாக இது அமைந்துள்ளது.