Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

கியூட்டாக சிரிக்கும் அஜித் த்ரிஷா… வெளியானது விடாமுயற்சி படத்தின் Third Look போஸ்டர்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

மகிழ் திருமேனி இயக்கத்தில் “விடாமுயற்சி” என்ற திரைப்படத்தில் அஜித்குமார் நடித்து வருகிறார். இதில் அவருக்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார். இது அஜித்தின் 62வது ஆக்ஷன் படமாக உருவாகி வருகிறது.

இத்திரைப்படத்தில் வில்லனாக ஆக்ஷன் கிங் அர்ஜுன் மற்றும் ஆரவ் நடித்துள்ளனர். நடிகைகள் ரெஜினா கசாண்ட்ரா, பிரியா பவானி ஷங்கர் உள்ளிட்ட பலரும் இதில் நடிக்கின்றனர். இப்படத்தை ‘லைகா’ நிறுவனம் சார்பில் சுபாஸ்கரன் தயாரிக்க, அனிருத் இசையமைக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அஜர்பைஜானில் தொடங்கியது.

சிறு இடைவேளைக்கு பின் நடிகர் அஜித் குமாரின் ‘விடாமுயற்சி’ படப்பிடிப்பு அஜர்பைஜானில் மீண்டும் தொடங்கியது. படத்தின் சண்டை காட்சிகள் படமாக்கப்படும் வீடியோவை பகிர்ந்து அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா அப்டேட் கொடுத்தார்.சமீபத்தில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்களை படக்குழுவினர் வெளியிட்டனர். அதில் அஜித் கருப்பு நிற கூலர்ஸுடன் பிளாக் அன் பிளாக் ஜெர்கினுடன் டிரெஸ்ஸில் மாஸாக நடந்து வருவது, காரில் சேஸிங் கையில் துப்பாக்கி என மாஸாக இருந்தார்.

தற்போது படத்தின் புதிய போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த போஸ்டரில் அஜித் மற்றும் திரிஷா இடம் பெற்றுள்ளனர். அஜித் சில வருடங்களாக சால்ட் அண்ட் பெப்பர் மற்றும் முழு வெள்ளை முடியுடன் தான் காணப்படுகிறார். ஆனால் இந்த போஸ்டரில் அவர் கருப்பு முடியுடன் காணப்படுகிறார். அஜித்தின் விண்டேஜ் லுக்கில் காணப்படுவதால் இந்த போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் மிகப் பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.

- Advertisement -

Read more

Local News