Touring Talkies
100% Cinema

Wednesday, May 14, 2025

Touring Talkies

கிங்ஸ்டன் படத்தின் கோஸ்ட் கேரக்டரை அறிமுகப்படுத்திய படக்குழு!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ஜி.வி. பிரகாஷ் குமார் தனது 25வது படத்திற்கு ‘கிங்ஸ்டன்’ என்று பெயரிட்டுள்ளார். இந்த படத்தை ஜி.வி. பிரகாஷின் பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் மற்றும் ஜீ ஸ்டூடியோஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. இப்படத்தின் கதை, திரைக்கதை, இயக்கத்தை கமல் பிரகாஷ் மேற்கொண்டு உள்ளார். மேலும், இது ஜி.வி. பிரகாஷ் தனது தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் தயாரிக்கும் முதல் படம் என்பதால் இதற்கான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.

இந்த படத்தில் நடிகை திவ்யபாரதி, ஜி.வி. பிரகாஷின் ஜோடியாக நடிக்க உள்ளார். ‘பேச்சுலர்’ படத்திற்குப் பிறகு இவர்களது இரண்டாவது கூட்டணி என்பதால் ரசிகர்கள் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இப்படத்தில் சேத்தன், அழகம் பெருமாள், இளங்கோ குமரவேல் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் மார்ச் 7ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. அதற்குள் இப்படத்தின் பாடல்கள் வெளியானதும், அவை ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றன.

‘கிங்ஸ்டன்’ இந்தியாவின் முதல் கடல் பேய் படமாக உருவாகி இருப்பதால், ரசிகர்கள் மற்றும் திரை உலகத்தினரிடம் இப்படத்திற்கான எதிர்பார்ப்பு மிக அதிகம். ஏற்கனவே இப்படத்தின் டீசர் சமூக வலைதளங்களில் வெளியான நிலையில், இன்று படக்குழு டிரெய்லரை வெளியிட்டுள்ளனர். அதன்படி, சென்னையில் இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது.இதில் இப்படத்தின் கோஸ்ட் கேரக்டரை படக்குழுவினர் இன்று நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தினர்.

- Advertisement -

Read more

Local News