Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

கால்ஷீட் பிரச்சினையால் காலதாமதமாகும் காதலிக்க நேரமில்லை படத்தின் படப்பிடிப்பு!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ஜெயம் ரவி ஜெனீ, பிரதர், காதலிக்க நேரமில்லை போன்ற பல படங்களில் தொடர்ந்து நடித்துக்கொண்டு இருக்கிறார். கமல்ஹாசனுடன் ஜெயம் ரவி இணைந்து நடிக்க இருந்த தக் லைஃப் படத்திலிருந்து அவர் விலகியுள்ள நிலையில், இன்று முதல் பெங்களூரில் காதலிக்க நேரமில்லை படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.

இந்த படத்தின் ஷூட்டிங்கை விரைவில் முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளனர்.அதே நேரத்தில், எம் ராஜேஷுடன் ஜெனீ, பிரதர் மற்றும் காதலிக்க நேரமில்லை போன்ற படங்களில் ஜெயம் ரவி பணியாற்றி வருகிறார். காதலிக்க நேரமில்லை படத்தை கிருத்திகா உதயநிதி இயக்க, ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரித்து வருகிறது.

இந்த ரொமான்டிக் காமெடி படத்தில் நித்யா மேனன் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடிக்கின்றார். மேலும், யோகிபாபு, வினய் ராய், லால், ஜான் கொக்கன், டிஜே பானு, லஷ்மி ராமகிருஷ்ணன் மற்றும் வினோதினி வைத்தியநாதன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

கால்ஷீட் பிரச்சனைகளினால், பல வாரங்களாக காதலிக்க நேரமில்லை படத்தின் ஷூட்டிங் நடைபெறாமல் இருந்தது. கமல்ஹாசனின் தக் லைஃப் படத்திற்காக ஜெயம் ரவி கொடுத்த கால்ஷீட் வீணாகியதால், அவர் அந்த படத்திலிருந்து விலகினார்.இந்நிலையில், ஜெயம் ரவி தொடர்ந்து பல படங்களில் கமிட் ஆகி நடித்து வருவதால், இன்று முதல் காதலிக்க நேரமில்லை படத்திற்காக கால்ஷீட் கொடுத்துள்ளார். இதை தொடர்ந்து, பத்து நாட்களில் இந்த படத்தின் ஷூட்டிங்கை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

- Advertisement -

Read more

Local News