சபரி புரொடக்ஷன்ஸ் சார்பில் மல்லையன் தயாரிப்பில், சதாசிவம் சின்னராஜ் எழுதி, இயக்கி, நாயகனாக நடித்துள்ள திரைப்படம் ‘இஎம்ஐ – மாதத் தவணை’.சாய் தான்யா நாயகியாக நடித்துள்ள இந்த படத்தில் பேரரசு, பிளாக் பாண்டி, ஆதவன், ஓ.ஏ.கே சுந்தர், மனோகர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஸ்ரீநாத் பிச்சை இசையமைக்க, பிரான்சிஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார். பாடல்களை பேரரசு, விவேக் எழுதியுள்ளனர்.
சில நாட்களுக்கு முன்பு வெளியான ‘இஎம்ஐ’ படத்தின் டிரெய்லர் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், இப்போது முன்னோட்ட காட்சிகள் (Sneak Peek) வெளியாகியுள்ளது.