புதுமுக இயக்குனர் அருண் இயக்கத்தில் பிரபல யூடியூபர் “ஜம்ப்கட்ஸ்” ஹரி பாஸ்கர் மற்றும் பிக் பாஸ் பிரபலம் லாஸ்லியா இணைந்து நடிக்கும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் அட்லீ வெளியிட்டுள்ளார். இப்படத்திற்கு Mr.House Keeping என பெயரிடப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகின் பிரபல தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளது.

ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பாளர் ஹேமா ருக்மணி புதிய படம் குறித்த அறிவிப்பை கடந்த சில நாட்களுக்கு முன் வெளியிட்டார். அதன்படி, ஜூலை 12ம் தேதி போஸ்டர் வெளியாகும் என அறிவித்திருந்தார். அருண் ரவிச்சந்திரன் இயக்கத்தில், ஓஷோ வெங்கட் இசையில், குலோத்துங்க வர்மன் ஒளிப்பதிவில், ராமசுப்பு படத்தொகுப்பில் இந்த படம் உருவாகி வருகிறது.
இயக்குனர் மற்றும் ஹீரோ இருவருக்கும் இது முதல் படம். இருப்பினும், Mr. Housekeeping படம் மக்கள் மத்தியில் எதிர்பார்ப்புகளை கிளப்பியுள்ளது. இயக்குனர் அருண் ரவிச்சந்திரன் இதற்குமுன்னர் சில படங்களில் துணை இயக்குனராகவும், இணை இயக்குனராகவும் (சந்திரமுகி 2) பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.