நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான மகாராஜா திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பையும் வெற்றியையும் பெற்றது. இந்நிலையில் ஓடிடியில் வெளியானதமிழ் படங்களில் மகாராஜா 25 மில்லியன் பார்வைகளைத் தாண்டி சாதனை படைத்தது. இதன் மூலம் 150 கோடி வரை நெட்பிளிக்சிற்கு லாபம் ஈட்டி கொடுத்திருப்பதாக சினிமா வட்டாரங்களிலிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
