Touring Talkies
100% Cinema

Tuesday, September 2, 2025

Touring Talkies

ஒரு நடிகைக்கு உண்மையான அங்கீகாரம் சரியான கதாபாத்திரம் கிடைப்பது தான் – ஜெயிலர் பட நடிகை மிர்னா மேனன்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

’பிக்பாஸ்’ மலையாள திரைப்படத்தில் மோகன்லாலின் ஜோடியாக நடித்ததன் மூலம் பிரபலமானார் மிர்னா மேனன். பின்னர் கிரேஸி பாலோவ், உகரம் உள்ளிட்ட தெலுங்கு படங்களில் நடித்தார். தமிழில் மீண்டும் நாயகியாக ’புர்கா’ படத்தில் நடித்தார். அதோடு, ’ஜெயிலர்’ படத்தில் ரஜினியின் மருமகளாக நடித்தார். தற்போது ’ஜெயிலர் 2’யிலும் நடிக்கிறார்.

இந்நிலையில் ’18 மைல்ஸ்’ என்ற படத்தில் அசோக் செல்வனின் ஜோடியாக நடிக்கிறார். இதனை சதீஷ் செல்வகுமார் இயக்கியுள்ளார். இந்த படத்தில் நடித்த அனுபவத்தைப் பற்றி மிர்னா கூறியதாவது: “ஒரு நடிகைக்கு உண்மையான அங்கீகாரம் என்பது அவரது நடிப்பு திறமையை வெளிப்படுத்தும் நல்ல கதாபாத்திரம் கிடைப்பதுதான். அந்த வகையில், ஆழமான, இளகிய, அதே சமயம் உண்மையான உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டிய கதாபாத்திரம் ’18 மைல்ஸ்’ படத்தில் எனக்கு கிடைத்திருக்கிறது.

இந்தக் கதையில் நான் பெரும்பாலும் மெளனம் மற்றும் உணர்வுகளின் மூலமாகவே நடித்துள்ளேன். வசனங்கள் இரண்டாம்தரத்தில் தான் உள்ளன. இப்படி ஒரு அற்புதமான வாய்ப்பை கொடுத்த இயக்குநருக்கு நன்றி. எனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரம் சிறப்பாக வர வேண்டும் என்பதில் அசோக் தெளிவாக இருந்தார். அவருடைய அர்ப்பணிப்பு எனக்கும் ஊக்கமாக இருந்தது.இது வெறும் நடிப்பு மட்டுமல்ல, அன்பும் பொறுப்பும் சமநிலையில் கையாள வேண்டிய இரண்டு நபர்களின் கதை. ’18 மைல்ஸ்’ வெளியான பின், ரசிகர்கள் எந்த அளவிற்கு கதையின் உணர்வுகளோடு தங்களை இணைத்துக் கொள்கிறார்கள் என்பதை அறிய ஆர்வமாக இருக்கிறேன்” என்றார்.

- Advertisement -

Read more

Local News