Touring Talkies
100% Cinema

Sunday, August 3, 2025

Touring Talkies

என்றும் கவர்ச்சிக்கு நான் இடம் கொடுக்க மாட்டேன்… பிரியா பவானி சங்கர் ஓபன் டாக்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகை பிரியா பவானி சங்கர், ‘மேயாத மான்’, ‘கடைக்குட்டி சிங்கம்’, ‘மான்ஸ்டர்’, ‘யானை’, ‘பத்து தல’, ‘ரத்னம்’ உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில், அவர் நடித்த ‘டிமான்ட்டி காலனி – 2’ படம் வெற்றியடைந்தது, அதில் அவரது நடிப்பும் பாராட்டப்பட்டது. அடுத்ததாக ஜீவாவுடன் அவர் நடித்த ‘பிளாக்’ திரைப்படம் வரும் 11ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது.

இதனைத் தொடர்ந்து, அவர் அளித்த பேட்டியில், “சினிமாவில் என் உடலை விற்பனைப் பொருளாகக் காட்டுவதற்கு நான் ஒருபோதும் சம்மதிக்க மாட்டேன். எனது உடலை கவர்ச்சியாகக் காட்டி வணிகம் செய்ய என்னால் முடியாது. திரும்பிப் பார்த்தால் தவறான காரியத்தை செய்துவிட்டோம் என்று எண்ண வேண்டாம்.

எதிர்மறை கதாபாத்திரங்களில் நடிக்க அழைப்புவந்தால் அதை மறுக்க மாட்டேன். இதுதான் சினிமா. ஆனால், ‘பேஷன்’ என்ற பெயரில் உடலை கவர்ச்சியாகக் காட்டுவதற்கு எனக்கு உடன்பாடில்லை” என்று பிரியா பவானி சங்கர் கூறியுள்ளார்.

- Advertisement -

Read more

Local News