

இந்தியன் 3 திரைப்படத்தில் தான் காஜல் அகர்வால் நடித்துள்ளார் என்றும் இந்தியன் 2 படத்தில் அவர் நடிக்கவில்லை என்றும் இயக்குநர் சங்கர் ஆடியோ வெளியீட்டு விழாவில் கூறிய நிலையில், சேனாபதியே அம்மாவாக காஜல் அகர்வால் நடித்துள்ளாராம் என்கிற கேள்விகளும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. சேனாபதியின் அப்பா கமலுக்கு ஜோடியாகவே காஜல் அகர்வால் நடித்திருப்பார் என ரசிகர்கள் கணித்து செய்து வருகின்றனர்.