Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

என் பெயரிலுள்ள போலி சமூக வலைதள கணக்குகளை நம்ப வேண்டாம்… மமிதா பைஜூ வேண்டுகோள்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

மலையாளத்தில் பிரேமலு படத்தின் மூலம் பிரபலமான இளம் நடிகை மமிதா பைஜூ. தமிழில் ரெபல் எனும் படத்தின் மூலம் அறிமுகமானார். இப்போது ராம்குமார், விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவாகி வரும் புதிய படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

இதைத்தொடர்ந்து வினோத் இயக்கத்தில் விஜய்யின் 69வது படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் மமிதா ஒப்பந்தம் ஆகியுள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. இந்த சமயத்தில் எக்ஸ் சமூக வலைதளத்தில் மமிதா பைஜூ பெயரில் இருந்து சில போலி கணக்கில் பதிவுகள் வந்தன.

இந்த நிலையில் மமிதா பைஜூ தனது இன்ஸ்டாவில், “தனக்கு எக்ஸ் தள பக்கத்தில் எந்த கணக்கும் இல்லை போலி கணக்குகளை உருவாக்கி தனது பெயரை அவதூறு செய்பவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுப்பேன்” என பதிவிட்டுள்ளார்.

- Advertisement -

Read more

Local News