Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

எனக்கு பிறந்தநாள் கொண்டாட்டம் எல்லாம் இல்லை… மனமுருகி பேசிய இளையராஜா!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இளையராஜா 1976-ஆம் ஆண்டு அன்னக்கிளி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானார். தமிழ் சினிமாவின் பெருமையாக விளங்கும் இளையராஜா, தமிழ் சினிமாவிற்கு ஏராளமான அற்புதமான பாடல்களை வழங்கியுள்ளார். அவர் ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசை அமைத்துள்ளார்.

தமிழ் மொழி மட்டுமின்றி இந்தி, மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்கு போன்ற பிற மொழி படங்களிலும் அவர் பணியாற்றியுள்ளார். ஜூன் 3, 1943-ஆம் ஆண்டு தேனி மாவட்டத்தில் பிறந்த இளையராஜா, இன்று தனது 81-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்தபோது, “பிறந்தநாள் வாழ்த்துக்கள் நீங்கள் கூறுகிறீர்கள், ஆனால் நான் என் மகளை இழந்ததால் எனக்கு பிறந்தநாள் கொண்டாட்டம் இல்லை, இதெல்லாம் உங்களுக்காகதான், எனக்காக இல்லை” என்று அவர் மனமுருகி கூறினார்.

- Advertisement -

Read more

Local News