Touring Talkies
100% Cinema

Monday, August 4, 2025

Touring Talkies

எனக்கு 100 கோடி தர வேண்டும்… நஷ்டஈடு கேட்டு ஆளவந்தான் பட நடிகை ரவீனா டாண்டன் சார்பில் நோட்டீஸ்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

90களில் பாலிவுட்டில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் ரவீனா டாண்டன். தமிழில் ‘சாது, ஆளவந்தான்’ ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். சமீபத்தில் அவரைப் பற்றிய வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.பின்னர் காவல்துறையினர் சிசிடிவி ஆராய்ந்து நடிகை ரவீனா மீது எந்த தவறும் இல்லை என அறிவித்தனர்.

அந்த வீடியோவை வெளியிட்ட மோசின் ஷேக் என்பவர் மீது 100 கோடி நஷ்ட ஈடு கேட்டு ரவீனா டாண்டன் சார்பில் வக்கீல் நோட்டீஸ் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. “தன்னை பத்திரிகையாளராக சொல்லிக் கொள்ளும் அந்த நபர் எக்ஸ் தளத்தில் சமீபத்தில் போலி வீடியோ ஒன்றைப் பரப்பியிருந்தார். அது தவறானது, ஏமாற்றுவது.

ஜூன் 1ம் தேதி மும்பையில் ரவீனா வீட்டிற்கு வெளியே நடந்த ஒரு சம்பவத்தில் அவரது வாகனம் அங்கிருந்த சில பெண்களை பாதித்ததாகவும், தன்னைச் சுற்றியிருந்த கூட்டத்தை விலக்குவதற்கு அவர் முயற்சித்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. ஆனால், சிசிடிவி ஆதாரங்களில் அவரது வாகனம் பெண்கள் மீது மோதியதையோ அல்லது ரவீனா குடிபோதையில் இருந்ததையோ காட்டவில்லை,” என்று ரவீனாவின் வக்கீல் தெரிவித்தார்.

- Advertisement -

Read more

Local News