Saturday, September 14, 2024

எதிர்பார்ப்பை தூண்டியுள்ள சீனு ராமசாமியின் கோழிப்பண்ணை செல்லதுரை ட்ரெய்லர்! #KozhipannaiChelladurai

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

யோகி பாபு மற்றும் புதுமுகங்கள் நடித்துள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு தேனி பெரியகுளம் பகுதியில் நடைபெற்று முடிந்தது. ஆக்லாந்து சர்வதேச திரைப்பட விழாவில் தேர்வான முதல் தமிழ்ப்படம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது.

இந்நிலையில், படக்குழுவினர் இன்று இப்படத்தின் டிரைலரை வெளியிட்டுள்ளனர். அண்ணன்-தங்கை உறவை மையமாகக் கொண்ட இப்படம் செப்டம்பர் 20 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

‘தென்மேற்கு பருவக்காற்று’, ‘நீர் பறவை’, ‘தர்மதுரை’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கி கவனம் பெற்றவர் இயக்குநர் சீனு ராமசாமி. இவரின் இயக்கத்தில் இறுதியாக வெளியான ‘மாமனிதன்’ படம் விமர்சகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது, சீனு ராமசாமி தனது அடுத்த படத்தை ‘கோழிப்பண்ணை செல்லதுரை’ என்கிற பெயரில் இயக்கியுள்ளார். இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி, படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

- Advertisement -

Read more

Local News