விஜயகாந்த் உடல்நலக்குறைவால் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உயிரிழந்தார். அவரது மறைவு பலரையும் துயரத்தில் ஆழ்த்தியது. அவர் வாழ்ந்த காலத்தில் பலரும் அவரால் பயன் அடைந்துள்ளனர். சாமானியர்கள் முதல் பிரபலங்கள் வரை அந்த பட்டியல் நீள்கின்றது.
இந்நிலையில், விஜயகாந்த்துடன் ‘நூறாவது நாள்’ படத்தில் இணைந்து நடித்த மோகன், விஜயகாந்த் குறித்து பேசியது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.விஜயகாந்த் ஒரு நேர்மையான மனிதர். அப்படிப்பட்டவரை சினிமாவில் காண்பது அரிது. அவரின் மனதில் என்ன தோன்றுகிறதோ அதை வெளிப்படையாகச் சொல்லிவிடுவார். குறிப்பாக, அவரது அன்னதானம் பற்றிப் பேச வேண்டும்.
எந்த நேரத்தில், யாருக்கு உதவ வேண்டும் என்றால் அது செய்ய நேரம் பார்ப்பதில்லை.அதேபோல், அவரது நிர்வாக திறமை குறித்தும் சொல்லவேண்டும். சிவாஜி மறைந்தபோது, விஜயகாந்த் தனது நிர்வாக திறமையை அனைவரும் கண்டனர். நடிகர் சங்க தலைவராக இருந்தபோதும், அவரது நிர்வாக திறமை சிறப்பாக இருந்தது.
விஜயகாந்த் பற்றி இன்னொரு விஷயம் சொல்ல வேண்டுமெனில், அவருக்கு இருந்த முரட்டு தைரியம் இப்போது யாருக்கும் இல்லை என்றார்.வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் கோட் படத்தில் வில்லனாக மைக் மோகன் நடித்துள்ளார் அதேசமயம் இதே படத்தில் விஜயகாந்த்தை ஏ.ஐ தொழில்நுட்பம் மூலம் அவர் ஒரு கதாபாத்திரத்தில் நடிப்பது போல் காட்சி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.