Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

‘இவங்க தொல்லை தாங்கமுடியல்ல’ யுவன் ஷங்கர் ராஜா போட்ட இன்ஸ்டாகிராம் பதிவு வைரல்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

லியோ படத்தைத் தொடர்ந்து விஜய்யின் 68-வது படமான ‘கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்ஸ் வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். இதில் நடிகர்கள் ஜெயராம், பிரபு தேவா, மோகன், பிரஷாந்த், வைபவ், சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

முன்னதாக, விசில் போடு மற்றும் சின்னச் சின்ன கண்கள் ஆகிய இரண்டு பாடல்களைப் படக்குழுவினர் வெளியிட்டிருந்தனர். தொடர்ந்து, படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி ஆகஸ்ட் 1 ஆம் தேதி கோட் படத்தின் அடுத்த அப்டேட் வெளியாகும் என தெரிவித்திருந்தார். இது, 3-வது பாடலின் அறிவிப்பாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில், இசையமைப்பாளர் யுவன் தனது இன்ஸ்டா பக்கத்தில், “இவர்கள் தொல்லை தாங்கவில்லை” எனக் கூறி வெங்கட்பிரபு, விஷ்ணு வரதன் கீழே உட்கார்ந்திருக்கும் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் வைரல் ஆன நிலையில் வெங்கட் பிரபு தி கோட் படத்தின் பாடல்களுக்காவும் விஷ்ணுவர்தன் நடிகர் அதர்வா சகோதரரை வைத்து இயக்கும் நேசிப்பாயா படத்தின் பட பாடல்களின் பணிகளுக்காக யுவனின் ஸ்டுடியோவில் இருப்பதாக கூறப்படுகிறது.

- Advertisement -

Read more

Local News