நடிகை ஜோதிகா 1997 ஆம் ஆண்டு வெளியான ஹிந்தி திரைப்படம் டோலி சஜா கே ரஹ்னா மூலம் திரையுலகில் அறிமுகமானார். ஆனால், அதன் பிறகு ஹிந்தி திரைப்படங்களில் நடிக்கவில்லை. 1999ஆம் ஆண்டு தமிழில் நடித்த வாலி படம் வெற்றி பெற்றதன் மூலம், தொடர்ந்து தமிழ் திரைப்படங்களில் முக்கிய கதாநாயகியாக வளர்ந்தார். மேலும், மலையாளம் மற்றும் தெலுங்கு திரைப்படங்களிலும் தனது கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடித்துள்ளார்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு, அவர் மீண்டும் ஹிந்தி திரையுலகில் அஜய்தேவ்கனுடன் சைத்தான் மற்றும் ராஜ்குமார் ராவுடன் ஸ்ரீகாந்த் போன்ற படங்களில் நடித்துள்ளார். தற்போது, பெண்களின் முக்கியத்துவம் மிக்க கதைகளை தேர்வு செய்து நடிக்கிறார். திரைப்படங்களைத் தாண்டி, தற்போது வெப் தொடர்களிலும் நடிக்கத் தொடங்கியுள்ளார்.

இந்த நிலையில், ரசிகர்களுக்கு திடீர் சர்ப்ரைஸ் அளிக்கும் வகையில், இன்ஸ்டாகிராமில் அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக வைரலாகி வருகின்றன.