கேரள மாநிலத்தைச் சேர்ந்த மிர்னா மேனன், தமிழ் திரைப்படங்களில் மட்டுமே நடித்து வந்துள்ளார். கேரளாவில் கல்லூரிப் படிப்பை முடித்த பின்னர், வெளிநாட்டில் சாஃப்ட்வேர் என்ஜினியராக வேலை பார்த்து வந்தார். ஆனால், மாடலிங் துறையில் அவருக்கு ஆர்வம் ஏற்பட்டதால், வேலைவிட்டுவிட்டு மீண்டும் கேரளாவிற்கு திரும்பி, சினிமா மற்றும் மாடலிங் துறைகளில் வாய்ப்புகளைத் தேடி வந்தார்.
ஆனால், சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மட்டுமே அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. தனது திரையுலக பயணத்தை “அதிதி மேனன்” என்கிற பெயரிலேயே ஆரம்பித்தார். 2016ஆம் ஆண்டு வெளியான “பட்டதாரி” திரைப்படம் அவரின் முதல் தமிழ் படம். இதன் பிறகு பல படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.
ரஜினிகாந்த் நடித்த “ஜெயிலர்” படத்தில் நெல்சன் இயக்கத்தில், அவர் ரஜினியின் மருமகளாக நடித்திருந்தார். இதில் அவருக்கு பெரிய அளவில் காட்சிகள் இல்லாமல் இருந்தாலும், தற்போதைய நிலையில் அவர் ஒரு தெலுங்கு மற்றும் ஒரு தமிழ் படத்தில் நடித்து வருகிறார். மேலும், தனது உடல் அழகை மிளிரவைத்து சிக்கென்ற உடைகளில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இதற்கு உதாரணமாக, அண்மையில் டைட்டான பனியன் அணிந்து எடுத்து, கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு, ரசிகர்களை பரவசத்தில் ஆழ்த்தியுள்ளார்.