நடிகர் ஷாம் தற்போது அஸ்திரம் என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பேசிய நடிகர் ஷாம், நான் நடித்த படங்களில் இயற்கை படத்தின் இரண்டாவது பாகம் எடுப்பதற்கான ஒரு ஐடியா இருந்தது. ஆனால் ஜனா சாரின் மறைவால் அதை எடுக்க முடியாமல் போய்விட்டது. இயக்குநர் அகிலனிடம் இதுதொடர்பாகப் பேசிக்கொண்டிருக்கிறோம். அவர் படத்தை எடுக்கலாம் என்று சொன்னால் நிச்சயம் ‘இயற்கை 2’ வெளியாகும்” என்று தெரிவித்திருக்கிறார்.
