Saturday, September 14, 2024

இயக்குனர் வெங்கட்பிரபுவும் நடிகர் மோகன்லாலும் திடீர் சந்திப்பு… என்னவா இருக்கும்?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இயக்குனர் வெங்கட் பிரபு, நடிகர் விஜய் நடித்துள்ள தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம் தி கோட் படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, யோகிபாபு, சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். சமீபத்தில் “தி கோட்” படத்தின் டிரைலர் வெளியானது. இந்த திரைப்படம் அடுத்த மாதம் 5ஆம் தேதி திரைக்கு வர உள்ள நிலையில், இப்படத்தின் நான்காவது பாடல் நாளை வெளியாக உள்ளது.

இந்த நிலையில், இயக்குனர் வெங்கட் பிரபு மற்றும் பிரேம்ஜி, நடிகர் மோகன்லாலை சந்தித்தது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதைக் கண்ட ரசிகர்கள், “மோகன்லால் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறாரா?” என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ஆனால், மோகன்லால் “தி கோட்” படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவில்லை என்றும், “பரோஸ்” படத்தின் போஸ்ட் புரொடக்ஷனின் போது சென்னையில் இருவரும் சந்தித்ததாகவும் கூறப்படுகிறது. நடிகர் மோகன்லால் நடித்துள்ள “பரோஸ்” திரைப்படம் வருகிற அக்டோபர் 3ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Read more

Local News