Saturday, September 14, 2024

இப்படி சல்லி சல்லியா நொறுக்கிட்டீங்களே… தி கோட் படத்தின் ஒரு சீக்ரெட்-ஐ போட்டு உடைத்த பிரேம்ஜி…

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

விஜயின் ‘கோட்’ திரைப்படம் செப்டம்பர் 5-ம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்து, யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படத்தில் பிரஷாந்த், பிரபுதேவா, மோகன் போன்ற பலர் நடித்துள்ளனர். இப்படம் மிகப்பெரிய பட்ஜெட்டில், ஹாலிவுட் தரத்துக்கு நிகரான VFX காட்சிகளுடன் உருவாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, டீஏஜிங் தொழில்நுட்பம் மூலம் விஜயை இளமையான தோற்றத்தில் மாற்றியுள்ளார் வெங்கட்பிரபு.

என்னதான் வெங்கட் பிரபுவிடம் இருந்து விஷயங்களை வரவைக்க பல கேள்விகள் கேட்கப்பட்டாலும் அவர் மிகவும் கவனமாகவே பதிலளித்து வருகின்றார். படத்தின் கதை பற்றியும் கதாபாத்திரங்கள் பற்றியும் எந்த ஒரு விஷயத்தையும் வெங்கட் பிரபு லீக் செய்யவில்லை. ஆனால் அவரது சகோதரரும் பிரபல நடிகருமான பிரேம்ஜி GOAT படத்தை பற்றி பல விஷயங்களை கசியவிட்டார்.

அவர் அளித்த பேட்டியில் தி கோட் படம் தொடங்கிய ஒரு நிமிடத்திலேயே மிகப்பெரிய சர்ப்ரைஸ் ஒன்னு இருக்கு என சொன்ன பிரேம்ஜி இத்தோடு நிறுத்தாமல் இப்படத்தில் அவர் நடிக்கும் கதாபாத்திரம் என்ன, அவர் என்ன வேலை செய்கின்றார் என்பதையெல்லாம் பிரேம்ஜி கூறிவிட்டார். இதனை கண்ட ரசிகர்கள் இப்படி சல்லி சல்லியா போட்டு நொறுக்கிட்டீங்களே என்றவாறு கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.

- Advertisement -

Read more

Local News