Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

இப்படி ஒரு கதையா? ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்திய ஹிப் ஹாப் ஆதி… வெளியான ‘கடைசி உலகப்போர் ‘ கிளிம்ஸ் வீடியோ!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இசையமைப்பாளர், நடிகர், தயாரிப்பாளர், பாடகர் என பல்வேறு திறமைகளுடன் கோலிவுட்டில் வலம் வரும் ஹிப் ஹாப் தமிழா ஆதி, இசையமைப்பாளராக தன்னுடைய பயணத்தை துவங்கி, “மீசைய முறுக்கு” என்ற படத்தின் மூலம் இயக்குனராகவும் வெற்றி பெற்றவர். நடிகராகவும் அடுத்தடுத்த படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

இதனிடையே, ஆதியின் இயக்கத்தில் நீண்ட காலங்களுக்கு பிறகு தற்போது “கடைசி உலகப் போர்” என்ற படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தில் நடித்து, தயாரித்தும் உள்ளார். நேற்றைய தினம் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ள நிலையில், இன்றைய தினம் படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி மிரட்டலாக அமைந்துள்ளது. இதில் போர்க்கள காட்சிகள் காணப்படுகின்றன. உலகத்தரத்தில் சிறப்பான கிராபிக்ஸ் காட்சிகளுடன் இந்த கிளிம்ப்ஸ் காணப்படுகிறது.

ஆதி நடிப்பில் 8வது படமாக உருவாகியுள்ளது “கடைசி உலகப்போர்” படம். இந்தப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் நேற்றைய தினம் மிகச்சிறப்பான வகையில் வெளியானது. இதில் முகத்தில் ரத்தம் வழிய, தலைக்குள் போர், வன்முறை, குண்டுவெடிப்பு போன்ற காட்சிகள் காணப்பட்டன. இதுவரை காமெடி, காதல், லட்சியம், குடும்ப சென்டிமென்ட் என பயணித்த ஹிப் ஹாப் ஆதி எவரும் எதிர்பார்க்காத ஒரு பாதையில் காலடி எடுத்து வைத்துள்ளதால், பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. வெளியான கிளிம்ப்ஸ் வீடியோ, படம் குறித்த மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

Read more

Local News