Touring Talkies
100% Cinema

Wednesday, March 12, 2025

Touring Talkies

இன்று என் அன்பு அண்ணனுக்கும், என் அன்பு தப்பிக்கும் பிறந்தநாள்… பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்த கமல்ஹாசன்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழ் திரையுலகின் தலைசிறந்தவர்களான இசையமைப்பாளர் இளையராஜா மற்றும் இயக்குநர் மணிரத்னம் ஆகியோர் இன்று தங்கள் பிறந்தநாளை கொண்டாடிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களின் ரசிகர்கள் பலரும் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

அதற்கு முன்னர், பிறந்தநாளை முன்னிட்டு சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள தனது அலுவலகத்தில் இசையமைப்பாளர் இசைஞானி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “பிறந்த நாள் வாழ்த்துக்களை நீங்கள் எனக்குச் சொல்கிறீர்கள். எனது மகளை இழந்த துக்கத்தில் இருப்பதால், பிறந்த நாளை நான் கொண்டாடவில்லை” என்று தெரிவித்தார்.

இதே நேரத்தில், நடிகரும் மக்கள் நீதி மய்யத் தலைவருமான கமல்ஹாசன் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், “இரட்டிப்பு சந்தோஷம் என்பது தமிழில் ஒரு அற்புதமான சொற்றொடர். சந்தோஷத்திற்கு அளவீடு இருக்க முடியுமா என்ன? ஆனால் அதற்கு ஓர் உதாரணம் போன்றது இன்றைய நாள் எனக்கு. மூவரில் அண்ணனுக்கும் இன்று பிறந்தநாள், தம்பிக்கும் இன்று பிறந்தநாள் என்கிற மகிழ்ச்சியான தருணம் இது.

இசையில் கதையைச் சொல்லும் என் அன்பான அண்ணன் இளையராஜா, திரை எழுத்தில் ஒரு ரீங்காரத்தைச் சேர்க்கும் அன்புத் தம்பி மணிரத்தினம்… பிறந்தநாளில் இருவரையும் மனமகிழ்ச்சியோடு ஆரத்தழுவி வாழ்த்துகிறேன். எங்கள் மூவரின் கலைச்சொந்தம் என்றென்றும் தொடர்க” என்று குறிப்பிட்டுள்ளார்.

- Advertisement -

Read more

Local News