Touring Talkies
100% Cinema

Wednesday, March 12, 2025

Touring Talkies

இந்த படத்தை வெளியிட இயக்குநர் பட்ட கஷ்டங்களை பார்த்து கண் கலங்கினேன் – வாணி போஜன்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

சின்னத்திரையில் அறிமுகமானாலும், தற்போது வெற்றித்திரையில் புகழ் பெற்ற நடிகையாக வாணி போஜன் வலம் வருகிறார். அவர் அரை டஜனுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வருகிறார். ‘அஞ்சாமை’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப் படத்தை அறிமுக இயக்குநர் சுப்புராமன் இயக்க, ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் மூலம் எஸ்.ஆர். பிரபு வெளியிட்டுள்ளார்.

‘செங்களம்’ வெப்சீரிஸ் வெளியானபோது, அரசியலுக்கு வருவீர்களா என்று பலர் கேட்டனர். நான் ஆமாம் என்றேன். ஆனால், என் அப்பா அதற்காக பதறினார். இதையே ஒரு ஆண் சொன்னால், பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை.

ஒரு பெண் சொன்னால் மட்டும் கேள்வி கேட்கிறார்கள். இது என்னை பல இடங்களில் ஆமாம் என்று சொல்வதற்கு தூண்டுகிறது. நல்லது செய்ய விரும்பும் யாரும் அரசியலுக்கு வரலாம். நான் அரசியலுக்கு வந்தால், இலவச கல்வியை முதலில் கொண்டு வருவேன் என்றார்.

தொடர்ந்து பேசிய வாணி போஜன், “இந்த திரைப்படத்தை வெளியிட இயக்குநர் பட்ட கஷ்டங்களை பார்த்து நானே கண் கலங்கினேன். ஒரு படத்தை வெளியிடுவது எவ்வளவு கஷ்டம் என்று எனக்கு தெரியாது. நாங்கள் அடுத்தடுத்த படங்களில் நடிப்போம், சம்பளமும் உயரும். ஆனால் இந்த திரைப்படத்தை வெளியிட அதிகம் கஷ்டப்பட்டார்” என்று கூறினார்.

- Advertisement -

Read more

Local News