Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

இதுவரை காணாத கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஹன்சிகா… வெளியான காந்தாரி மேக்கிங் வீடியோ!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழ் திரையுலகில் அறிமுகமான சிறிய காலத்திலேயே, ஹன்சிகா முன்னணி ஹீரோயினாகி, விஜய், சூர்யா, தனுஷ், சிம்பு போன்ற பிரபலங்களுடன் நடித்து புகழ் பெற்றார். 2011 ஆம் ஆண்டு தனுஷ் நடித்த மாப்பிள்ளை திரைப்படத்தின் மூலம் அவர் தமிழ் சினிமாவில்
அறிமுகமானார்.

அன்போடு ‘சின்ன குஷ்பு’ என்று அழைக்கப்படும் ஹன்சிகா, பட வாய்ப்புகள் குறைந்தபோது, சினிமாவில் இருந்து தற்காலிகமாக ஓய்வு எடுத்தார்.சிறிய இடைவெளிக்குப் பிறகு, ஹன்சிகா ‘மஹா’ படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்தார்.ஆனால் இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. தொடர்ச்சியாக, பார்ட்னர், மை நேம் இஸ் ஷ்ருதி, 105 மினிட்ஸ் போன்ற படங்களில் நடித்தார்.

சமீபத்தில், ஹன்சிகா நடித்த ‘கார்டியன்’ திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. தற்பொழுது, ஹன்சிகா ‘காந்தாரி’ என்ற படத்தில் நடித்துள்ளார்.இந்த படத்தை ஆர் கண்ணன் தயாரித்து இயக்கியுள்ளார். இதில் மெட்ரோ சிரிஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தின் இசையை முத்து கணேஷ் அமைத்துள்ளார். படத்தின் மேக்கிங் வீடியோ அண்மையில் வெளியிடப்பட்டது. ஹாரர் வகையைச் சேர்ந்த இப்படம் ஜூலை மாதத்தில் வெளிவர உள்ளது.

- Advertisement -

Read more

Local News