இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் தமிழில் அருண் விஜய் உடன் தடையற தாக்க படத்தின் மூலம் அறிமுகமானவர் ரகுல் ப்ரீத் சிங். தொடர்ந்து தீரன் அதிகாரம் ஒன்று, தேவ், என்ஜிகே உள்ளிட்ட படங்களில் நடித்து கவனம் ஈர்த்தார்.



சிவகார்த்திகேயனுடன் அயலான் படத்தில் நடித்திருந்தார். அப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. தொடர்ந்து பல படங்களில் நடித்து பிஸியான நடிகையாக வலம் வருகிறார். கடைசியாக ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் இந்தியன் 2 திரைப்படத்திலும் நடித்துள்ளார்.


இந்நிலையில் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் நடிகை ரகுல் பிரீத் சிங் தனது இன்ஸ்டா பக்கத்தில் உடற்பயிற்சி செய்யும் விடியோவை பதிவிட்டுள்ளார். அதில், சமநிலையும் தொடர்ச்சியான உடற்பயிற்சியுமே திறவுகோள் எனக் கூறியுள்ளார்.