Touring Talkies
100% Cinema

Wednesday, March 12, 2025

Touring Talkies

இது எங்களின் புதிய முயற்சி… இதுவரை கண்டிராத திரைப்படமாக இருக்கும் – பயமறியா பிரம்மை இயக்குனர்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

புதுமுக நடிகர் ஜேடி, கதையின் நாயகனாக நடித்துள்ள ‘பயமறியா பிரம்மை’ திரைப்படத்தை அறிமுக இயக்குனர் ராகுல் கபாலி இயக்கியுள்ளார். இந்த படத்தில் குரு சோமசுந்தரம், ஜான் விஜய், ஹரிஷ் உத்தமன், வினோத் சாகர், விஸ்வந்த், சாய் பிரியங்கா ரூத், திவ்யா கணேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.இந்த படத்திற்கு இசையமைப்பாளர் கே இசையமைக்கிறார். அகில் பிரகாஷ் படத்தொகுப்பு செய்கிறார்.

இப்படத்தின் டீசர் நேற்று வெளியானபோது மக்களின் கவனத்தை ஈர்த்தது.’பயமறியா பிரம்மை’ படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இந்த சந்திப்பில் பாடலாசிரியர் வெரோனிகா, ஒளிப்பதிவாளர்கள் நந்தா & பிரவீன், இசையமைப்பாளர் கே, நடிகர்கள் ஜாக் ராபின்சன், வினோத் சாகர், ஜேடி, குரு சோமசுந்தரம், நடிகை சாய் பிரியங்கா ரூத் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இயக்குநர் ராகுல் கபாலி கூறியதாவது: “பயமறியா பிரம்மை என்னுடைய முதல் படம். இந்தக் கதையை படமாக்க வேண்டும் என்று ஒரு சிந்தனையுடனே செயல்பட்டேன். குழுவாக இணைந்து எங்களால் என்ன செய்ய முடியும் என்பதனை யோசித்து, எங்களுடைய தகுதியும், திறமையும் பயன்படுத்தி, ஒரு கதைக்குள் எங்களால் என்ன செய்ய முடியும் என நினைத்து தான் இந்த படத்தை உருவாக்கினேன். அதனால் இந்த படத்தில் பணியாற்றிய ஒட்டுமொத்த குழுவினருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த திரைப்படம் இனிமையான சுவாரசியமான அனுபவத்தை தரும். வெளியாகும் படங்களில் இந்த திரைப்படம் எங்களின் புதிய முயற்சியை உணர்த்தும். அனைவரும் திரையரங்கத்திற்கு வருகை தந்து பார்த்து, பிடித்திருந்தால் ஆதரவளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.”

- Advertisement -

Read more

Local News