Monday, November 18, 2024

ஆஸ்கார் விருதுக்கு செல்வது மிகவும் எளிதாக இருக்காது என்று ‘Laapataa Ladies’ படத்தின் இயக்குநர் கிரண் ராவ் டாக்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

2025 ஆஸ்கர் விருதுக்கு இந்திய சினிமாவில் இருந்து ‘லாபதா லேடீஸ் ‘ திரைப்படம் தேர்வாகி உள்ளது. ஆஸ்கார் விருதுக்கு செல்வது மிகவும் எளிதாக இருக்காது என்று “லாபதா லேடீஸ்” படத்தின் இயக்குநர் கிரண் ராவ் கூறியுள்ளார். 2024 ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள் அடுத்த ஆண்டில் வழங்கப்பட உள்ளன. பல நாடுகளிலிருந்து திரைபடங்கள் பரிந்துரை செய்யப்படுகின்றன. அந்த வகையில், இந்தியாவில் இருந்து அமீர்கானின் முன்னாள் மனைவி கிரண் ராவ் இயக்கிய “லாபதா லேடீஸ்” திரைப்படம் சிறந்த சர்வதேச திரைப்படம் பிரிவில் ஆஸ்கருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து இயக்குநர் கிரண் ராவ் கூறுகையில், நான் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன். இந்த ஆண்டில் நிறைய நல்ல படங்கள் ஆஸ்கருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. எனது படம் ஆஸ்கருக்கு பரிந்துரை செய்யப்பட்டது மூலம், இது அதிகமான பார்வையாளர்களிடம் சென்று சேரும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

இந்த படத்தின் மீது பெரிதும் நம்பிக்கை வைத்த ரசிகர்களுக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எல்லாருக்கும் பிடிக்கும் வகையில் இந்த படத்தில் ஏதாவது ஒன்று இருக்கும் என்று நான் நம்புகிறேன். இந்த படம் பெண்களின் பிரச்சினைகள், அவர்களின் எதிர்பார்ப்புகள் மற்றும் ஆசைகளை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இப்படம் ஆஸ்கருக்குப் பரிந்துரை செய்யப்படுவது மிகவும் ஊக்கமளிக்கும் நிகழ்வு. பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், மற்றும் இதில் நடித்துள்ள புதிய நடிகர்கள் மற்றும் அவர்களின் திறமையை மக்கள் பெரிதும் பாராட்டியுள்ளனர்.

ஆஸ்கருக்கான பயணம் எளிதாக இருக்காது. “லாபதா லேடீஸ்” ஆஸ்கருக்குத் தேர்வாகியிருக்கின்றது என்றது எனக்கு மிகுந்த பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. இந்த அங்கீகாரம் எனது படக்குழுவின் சிரத்தையான உழைப்பிற்கு கிடைத்த சான்றாகும். இப்படத்தை தயாரிக்க நானும், எனது குழுவும் 4 முதல் 5 வருடங்கள் உழைத்தோம். படக்குழுவின் அர்ப்பணிப்பு மற்றும் ஆர்வமே இதற்குத் துணையாக இருந்தது. சினிமா என்றுமே இதயங்களை இணைத்து, எல்லைகளை தாண்டி சென்று உலகெங்கிலும் மக்களின் மனதை தாக்கும் சக்தியுள்ள ஊடகம். இந்தியா போலவே, இந்த படம் உலகின் பல பகுதிகளில் உள்ள ரசிகர்களால் வரவேற்கப்படும் என்று நான் நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

- Advertisement -

Read more

Local News