Tuesday, November 19, 2024

ஆசியாவிலேயே உண்மையான சிங்கத்தை வைத்து படமாக்கப்பட்ட முதல் திரைப்படத்தை உருவாக்கிய பிரபு சாலமன்! #MAMBO

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

2010 ஆம் ஆண்டு விதார்த் மற்றும் அமலா பால் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்த திரைப்படம் மைனா. இந்தப் படத்தை பிரபு சாலமன் இயக்கினார். இப்படம் மிகுந்த வெற்றியைப் பெற்று பல விருதுகளை வென்றது. இதற்கு முன் பிரபு சாலமன் கிங், கொக்கி, லீ, லாடம் போன்ற படங்களை இயக்கியிருந்தாலும், மைனா திரைப்படமே தமிழ் திரையுலகை திரும்பி பார்க்க வைத்தது.

அதன்பின் அவர் கும்கி, கயல் மற்றும் தொடரி போன்ற வெற்றிப் படங்களை இயக்கினார். கடைசியாக செம்பி திரைப்படத்தை இயக்கினார். இத்திரைப்படத்தில் செம்பி மற்றும் அஸ்வின் குமார் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்தனர். இப்படம் வெளியாகி மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது. இந்நிலையில் பிரபு சாலமனின் அடுத்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு மாம்போ என பெயரிட்டுள்ளனர். இது ஒரு சிறுவனுக்கும், சிங்கத்திற்கும் இடையேயான நட்பைப் பிரதிபலிக்கும் படமாகும்.

இத்திரைப்படத்தில் நடிகர் விஜயகுமாரின் பேரன் விஜய் ஸ்ரீ ஹரி நடிகராக அறிமுகமாகவுள்ளார். இப்படத்தில் உண்மையான சிங்கத்தை வைத்து எந்த வித சி.ஜி காட்சிகளும் இல்லாமல் படமாக்க முயற்சித்துள்ளனர். இதற்காக விஜய் ஸ்ரீ சிங்கத்துடன் பயிற்சி எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆசியாவிலேயே உண்மையான சிங்கத்தை வைத்து படமாக்கப்பட்ட முதல் திரைப்படம் இதுவே ஆகும்.இத்திரைப்படத்தில் யோகி பாபு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். டி.இமான் இப்படத்தின் இசையமைப்பாளர். இப்படத்தை காஜா மைதீன் மற்றும் அப்துல் கானி தயாரித்துள்ளனர்.

- Advertisement -

Read more

Local News