கடந்த 2021ம் ஆண்டில் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு, எஸ்.ஜே.சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன் உள்ளிட்டோர் நடித்து வெளிவந்த திரைப்படம் மாநாடு. யுவன் இசையமைத்தார். டைம் லூப்பை மையமாக வைத்து வெளியான இப்படம் சிம்புவுக்கு கம்பேக் படமாக அமைந்தது. அதோடு விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. ஏற்கனவே இத்திரைப்படம் தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் ரீமேக் ஆகவுள்ளதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் மூன்று வருடங்களுக்கு பிறகு இப்போது மாநாடு படத்தை ஆங்கிலத்தில் டப் செய்து வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
