Saturday, September 14, 2024

ஆகஸ்ட் 24ல் மிகப்பெரிய சர்ப்ரைஸ் வைத்திருக்கும் அந்தகன் படக்குழு… #ANDHAGAN

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

வைகாசி பொறந்தாச்சு படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமானவர் பிரசாந்த். இவர் 90களின் காலகட்டத்தில் கொடிகட்டிப் பறந்த முன்னணி நடிகர்களில் ஒருவர். நீண்ட இடைவேளைக்குப் பிறகு மீண்டும் திரைப்படங்களில் நடிக்கத்தொடங்கிய பிரசாந்த், தெலுங்கில் வினய விதய ராமா படத்தில் ராம்சரணுக்கு அண்ணனாக நடித்திருந்தார்.

அதன்பின் பார்வையற்றவர் கதாபாத்திரத்தில் ‘அந்தகன்’ என்ற திரைப்படத்தில் மீண்டும் கதாநாயகனாக நடித்துள்ளார். 2021 முதல் 2022 வரையிலான காலகட்டத்திலேயே எடுத்து முடிக்கப்பட்ட இந்த படம் சில சிக்கல்களால் வெளிவராமல் இருந்த நிலையில் தற்பொழுது வெளியீட்டிற்கு தயாராகியுள்ளது.

இந்நிலையில் பிரசாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘அந்தகன்’ திரைப்படத்தின் குழுவிற்கு ஜூலை 24-ம் தேதி மிக பெரிய சர்ப்ரைஸ் காத்திருக்கிறது என்று படக்குழு கூறியுள்ளது. திரைப்படம் வரும் ஆக்ஸ்ட் 15 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

- Advertisement -

Read more

Local News