Saturday, September 14, 2024

அரசியலுக்கு வர இப்போதைக்கு வாய்ப்பு இல்லை ஆனால்… கீர்த்தி சுரேஷ் டாக்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

சுமன் குமார் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடித்துள்ள ‘ரகு தாத்தா’ படம் ஆகஸ்ட் 15ல் வெளியிடப்பட உள்ளது. மதுரைக்கு வந்த கீர்த்தி சுரேஷ் செய்தியாளர்களிடம் பேசும்போது, “எனக்கு மிகவும் பிடித்த ஊர் மதுரை. மல்லிப்பூவும், மீனாட்சி அம்மன் கோயிலும் எனக்கு மிகவும் பிடித்தவை,” என்று தெரிவித்தார்.

‘ரகு தாத்தா’ படத்தில், பெண்ணியத்தைப் பற்றி போராடும் ஒரு பெண்ணாக நடித்துள்ளேன். பெண்கள் எப்படி இருக்க வேண்டும், எப்படி உடை அணிய வேண்டும் என்பனவற்றை பல்வேறு திணிப்புகளாக கூறுகிறார்கள். கலாச்சாரம் என்ற பெயரில் பெண்கள் மீது திணிக்கப்படும் விஷயங்களை இந்த படத்தில் வெளிப்படுத்தியுள்ளோம். ஹிந்தி திணிப்பு பற்றியும் சில இடங்களில் பேசப்பட்டுள்ளது. ஆனால் எதுவுமே சீரியஸாக இல்லாமல், முழுக்க முழுக்க காமெடியாகவே சொல்லியுள்ளோம்.

இப்போதைக்கு எனக்கு அரசியலுக்கான ஆர்வம் இல்லை, நடிப்பிலேயே கவனம் செலுத்த விரும்புகிறேன். எதிர்காலத்தில் அரசியலில் ஆர்வம் வந்தாலும் வராமலும் இருக்கலாம். எனக்கு ஹிந்தி மொழி தெரியும், ஆனால் ஹிந்தி திணிப்பு சரியல்ல என்று இதற்காக சொன்னேன். மொழி மட்டுமல்ல, எந்த விஷயத்திலும் திணிப்பு தவறானது. எல்லா துறைகளிலும் பிரச்னைகள் உள்ளன, ஆனால் சினிமாவில் இது பெரிதாக தெரிகிறது,” என்றார்.

- Advertisement -

Read more

Local News