விஜய் சேதுபதி நடித்துள்ள அவரது 50வது திரைப்படம் மகாராஜா. இப்படத்தின் ட்ரெயிலரில் லட்சுமியை தேடும் விஜய் சேதுபதி கவனத்தை ஈர்த்திருந்தார். ட்ரெயிலரில் லட்சுமி யார் என்பதை வெளிப்படுத்தாமல் மாஸ் காட்டியிருந்தனர். மகாராஜா திரைப்படம் இன்று வெளியானது. விஜய் சேதுபதி, தன்னுடைய நடிப்பிற்கு தீனி போடும் படங்களில் நடித்து வருகிறார். ஹீரோவாக மட்டுமல்லாமல், கேரக்டர் ஆர்டிஸ்ட், வில்லன் போன்ற வித்தியாசமான கேரக்டர்களிலும் நடித்துள்ளார்.

மகாராஜா பட ப்ரமோஷன்களில் ஒரு பேட்டியில், கமல்ஹாசன் விஜய் சேதுபதிக்கு முத்தம் கொடுப்பதாக உள்ள புகைப்படத்தை காட்டி கேள்வி எழுப்பப்பட்டது. கமல் குறித்த தனது அபிப்ராயங்களை பகிர்ந்தார். கமல், சினிமா குறித்த அறிவில் சிறந்தவர் என்றும், அவரிடம் பேசும்போது அவர் அறிவு பகிர்ந்து கொள்ளும் ஆளுமை கொண்டவர் என்றும் கூறினார். கமலுடன் நெருங்கிப் பழகும் போது அவரது அருமை தெரிய வரும் என்றும் தெரிவித்தார்.

நம்மவர் படத்தில் நடிக்க வந்த பையனுக்கு இந்த முத்தத்தின் அருமை தெரியாது என்றும், விஜய் சேதுபதிக்கு இந்த முத்தத்தின் அருமை தெரியும் என்றும் அவர் நெகிழ்ச்சி தெரிவித்தார்.முன்னதாக, நம்மவர் படத்தில் கல்லூரி மாணவராக நடிக்க வாய்ப்பு தேடி சென்றார். ஆனால் தன்னுடன் வந்த நண்பர்கள் செலக்ட் ஆன நிலையில் தானே செலக்ட் ஆகவில்லை என்று தெரிவித்தார். இந்த வாய்ப்பு கிடைத்திருந்தால் தன்னுடைய நிலை மாறியிருக்கும் என்றும், தற்போது மிகப்பெரிய சம்பளத்திற்கு அவர் நடித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
