Touring Talkies
100% Cinema

Tuesday, April 22, 2025

Touring Talkies

அட்லி – அல்லு அர்ஜுன் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தின் கதைக்களம் இதுதானா?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ஷாருக்கான் நடிப்பில் வெளியான ‘ஜவான்’ திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அட்லீ அடுத்ததாக அல்லு அர்ஜுன் நடிப்பில் அடுத்த திரைப்படத்தை இயக்கவுள்ளார்.அல்லு அர்ஜுன் பிறந்தநாளான அன்று புதிய படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது. பீரியட் கதையைக் கொண்ட இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்க உள்ளது.

இத்திரைப்படம் பேரலல் யூனிவர்ஸ் கான்சப்டில் உருவாகியுள்ள கதைக்களமாகும். படத்தின் கான்செப்ட் ஷூட் சமீபத்தில் நடைப்பெற்றதாக கூறப்படுகிறது. அதில் நடிகர் அல்லு ஆர்ஜுன் பல வித்தியாசமான தோற்றத்தில் லுக் டெஸ்ட் எடுத்துள்ளனர்.

இப்படத்தில் அல்லு அர்ஜுன் வேற்று கிரகத்தில் இருந்து வரும் கதாப்பாத்திரத்தில்ந் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் படத்தில் 12 வயதுள்ள ஒரு முக்கிய கதாப்பாத்திரம் இருப்பதாகவும் அதற்கு ஆடிஷன் நடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

மேலும் இப்படத்திற்கு அல்லு அர்ஜுன் 200 கோடி சம்பளம் மற்றும் இயக்குநர் அட்லீ-க்கு சம்பளம் 125 கோடி ரூபாய் என தகவல்கள் பரவி வருகிறது.

- Advertisement -

Read more

Local News