குறும்பு, அறிந்தும் அறியாமலும், பட்டியல் ஆகிய படங்களை இயக்கிய விஷ்ணுவர்தன், 2007-ம் ஆண்டு இயக்கிய பில்லா திரைப்படம் அவரின் திரைப்பயணத்தில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு, அவர் தற்போது தமிழில் புதிய படத்தை இயக்கியுள்ளார். அந்த படத்திற்கு நேசிப்பாயா என பெயரிடப்பட்டுள்ளது.
இப்படத்தில் ஆகாஷ் முரளி மற்றும் அதிதி ஷங்கர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தில் சரத்குமார், குஷ்பூ, பிரபு, ராஜா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் 14-ந் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டனர்.
அப்போது, யுவன் சங்கர் ராஜா பேசுகையில், “நேசிப்பாயா படத்திற்கு நாங்கள் சிறந்ததை கொடுத்திருக்கிறோம். இப்படத்தின் ஒரு பகுதியாக இருப்பதில் மகிழ்ச்சி” என்றார். முன்பு, தந்தை இளையராஜாவின் பாடல்களை சில பாடல்களாக மாற்றியதாக தெரிவித்த யுவனிடம், தொகுப்பாளர் காதல் பற்றிய பாடலுக்கு அவர் எதை தேர்ந்தெடுப்பார் என்று கேட்டார். அதற்கு யுவன், கொடியிலே மல்லிகைப்பூ பாடலை குறிப்பிட்டார். காதல் தோல்வி குறித்து கேட்டபோது, தளபதி படத்தில் வரும் சுந்தரி கண்ணால் ஒரு செய்தி என்ற பாடலை நினைவுகூர்ந்து கூறினார்.