தேசிங்கு பெரியசாமி அடுத்ததாக நடிகர் சிலம்பரசனின் 50வது திரைப்படத்தை இயக்கவிருக்கிறார். இந்த படத்திற்கு இசையமைப்பாளராக யுவன் சங்கர் ராஜா பணியாற்ற உள்ளார். இந்த திரைப்படத்திற்கான திட்டப்பணிகள் கடந்த பல ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. நேற்று சென்னையில் நடந்த ‘ஸ்வீட் ஹார்ட்’ திரைப்பட விழாவில் தேசிங்கு பெரியசாமி கலந்து கொண்டார்.

அந்த நிகழ்ச்சியில் பேசும்போது, தேசிங்கு பெரியசாமி, “சிம்புவின் 50வது படம் மீண்டும் தொடங்குவதற்கான முக்கிய காரணம் யுவன் சங்கர் ராஜா தான். ஒரு நாள், அவரிடம் நேரில் இந்த படத்திற்கான கதையை சொல்லியபோது, யுவன் அதை கவனமாக கேட்டார்.

கதையை கேட்டவுடன், ‘எப்போது படப்பணிகளை ஆரம்பிக்கலாம்?’ என்று நேரடியாகக் கேட்டார். மேலும், அவர் சிம்புவிற்கு நேரடியாக அழைத்து பேசினார். யுவன் அளித்த அந்த உற்சாகம் மற்றும் ஆதரவே , டிராப் ஆக வேண்டிய இந்த படம் மீண்டும் தொடங்குவதற்கான வாய்ப்பு கிடைத்தது,” என்று தெரிவித்தார்.