யூடியூப் தளத்தில் நகைச்சுவை வீடியோக்களை வெளியிட்டு பிரபலமானவர்கள் கோபி – சுதாகர். யூடியூப்பை தாண்டி, திரையுலகில் கதாநாயகர்களாக வலமவர முயன்றனர். இதற்காக பொதுமக்களிடம் பணம் திரட்டி, ஒரு திரைப்படத்தை உருவாக்க திட்டமிட்டனர்.மக்களின் ஆதரவு கிடைத்தாலும், அந்தப் படம் குறித்த தகவல்கள் தொடர்ந்து வெளிவராமல் இருந்தது. இந்நிலையில், கோபி – சுதாகர் இயக்கும் இரண்டாவது படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதிய படத்திற்கு ‘Oh God Beautiful’ என்று பெயரிடப்பட்டிருக்கிறது. இப்படத்தின் டைட்டில் டீசர் அண்மையில் வெளியிடப்பட்டது. இப்படத்தை விஷ்ணு விஜய் இயக்க உள்ளார்.
![](https://touringtalkies.co/wp-content/uploads/2025/02/1000157414.jpg)
முன்னதாக, இப்படம் தொடங்கப்பட்டதாக தகவல்கள் வந்திருந்தாலும், தற்போது அதிகாரப்பூர்வமாக படத்தின் பெயர் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கிடையில், படத்துடன் தொடர்புடைய மற்ற தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.