Touring Talkies
100% Cinema

Wednesday, May 14, 2025

Touring Talkies

நீங்க எப்போதும் எங்களுக்கு ஊக்கமாக இருந்தீங்க… விஜய்க்கு வாழ்த்துக்களுடன் ஸ்பெஷல் வீடியோ வெளியிட்ட இயக்குனர் வெங்கட்பிரபு!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில மாநாடு அக்டோபர் 27ஆம் தேதி விக்கிரவாண்டியில் நடைபெற உள்ளது. இதுவே கட்சி தொடங்கப்பட்ட பிறகு நடத்தப்படும் முதல் மாநாடு என்பதால், பலருக்கும் இதில் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.

திரைப்பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் என பலரும் இம்மாநாடு வெற்றியடைய வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர். பல நடிகர்கள் தமிழ் வெற்றிக் கழகத்தில் இணைந்து மாநாட்டுக்காக பணியாற்றுகின்றனர். இம்மாநாடு குறித்த பல தகவல்கள் தினமும் வெளிவருகின்றன.

இந்நிலையில் பிரபல இயக்குநர் ஒருவர், விஜய் தொடங்கியுள்ள நீண்ட பயணம் வெற்றியடைய தனது வாழ்த்துக்களை வீடியோவில் தெரிவித்துள்ளார். “அண்ணன் தளபதி விஜய்க்கு எங்கள் வாழ்த்துகள். நீங்க எப்போதும் எங்களுக்கு ஊக்கமாக இருந்தீங்க. உங்களுக்கு எங்களிடம் இருந்து இது ஒரு சிறிய அன்பளிப்பு” என வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

- Advertisement -

Read more

Local News