மலையாள இயக்குனர் கீது மோகன்தாஸ் இயக்கத்தில், ‘கே.ஜி.எப்’ புகழ் யஷ் தனது 19வது படமாக ‘டாக்சிக்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை கே.வி.என் நிறுவனம் தயாரிக்கிறது. யஷின் அக்கா கதாபாத்திரத்தில் நடிகை நயன்தாரா நடிக்க, கதாநாயகிகளாக கியாரா அத்வானி மற்றும் ஹூமா குரேஷி இணைந்துள்ளனர்.
![](https://touringtalkies.co/wp-content/uploads/2025/02/1000156987.png)
இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், படத்தை முதன்மையாக கன்னடம் மற்றும் ஆங்கிலத்தில் உருவாக்கி வருகின்றனர்.
![](https://touringtalkies.co/wp-content/uploads/2025/02/1000156991.png)
மேலும், தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட உள்ளது.