பிரபல சினிமா பாடலாசிரியரான பா.விஜய் அண்மையில் அளித்துள்ள பேட்டி ஒன்றில், சினிமாவை விட சீரியல்களுக்காக பாடல் எழுதி கொடுப்பது தான் மிகவும் கஷ்டமான விஷயம் என கூறியுள்ளார். அந்த பேட்டியில், ‘சீரியல்களுக்கு பாட்டெழுதுவது மிகப்பெரிய சவால். சினிமா பாடல்களை போல டிவி தொடர்களுக்கு எளிதாக எழுதி விட முடியாது. சினிமாவில் கதை, சிச்சுவேஷன், ஹீரோ ஹீரோயின் என குறைந்த அளவிலான காரணிகளே இருக்கும். ஆனால், சீரியலுக்கு அதில் உள்ள அனைத்து விஷயங்களும், கேரக்டர்களும் பிரதிபலிக்கும் வகையில் சீரியல் இயக்குநர்கள் பாடல்கள் கேட்பார்கள். அதுமட்டுமில்லாமல் டிவியில் அந்த பாடலை தினமும் கேட்டால் யாருக்கும் சலிப்பு வராமல் இருக்க வேண்டும். எனவே, சீரியலுக்கு பாடல் எழுதுவது தான் மிக சவாலான செயல்’ என்று பா.விஜய் அந்த பேட்டியில் கூறியிருக்கிறார்.
