டாப் கன், பேட்மேன் பாரெவர் போன்ற படங்களில் நடித்த ஹாலிவுட் நடிகர் வால் கில்மர் உடல்நலக்குறைவால் காலமானார்.ஹாலிவுட்டின் பிரபல நடிகர் வால் கில்மர், 65. பேட்மேன் பாரெவர் என்ற படத்தில் பேட்மேன் கதாபாத்திரத்தில் நடித்தார். இதுதவிர டாப் கன், ஹீட், வில்லோ, தி டோர்ஸ், தி செயின்ட் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். கடைசியாக 2022ல் வெளியான டாம் குரூஸ் உடன் ‛டாப் கன் மேவரிக்’ படத்தில் நடித்தார்.
