Touring Talkies
100% Cinema

Thursday, April 17, 2025

Touring Talkies

கூலி படத்தில் ரஜினி சாருடன் பணிபுரிந்த அனுபவம் எனக்கு மிகவும் சிறப்பானது… நடிகை பூஜா ஹெக்டே நெகிழ்ச்சி!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் விஜய்யுடன் ‘பீஸ்ட்’ படத்தில் கதாநாயகியாக நடித்த பூஜா ஹெக்டே, அதன் பின்னர் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், நடிகர் சூர்யா நடித்திருக்கும் ‘ரெட்ரோ’ என்ற படத்தில் நடித்துள்ளார். இதற்குப் பிறகு, மீண்டும் விஜய்யுடன் ‘ஜனநாயகன்’ படத்திலும், ராகவா லாரன்ஸுடன் ‘காஞ்சனா 4’ படத்திலும் நடித்து வருகிறார். மேலும், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடித்திருக்கும் ‘கூலி’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார்.

இதுபற்றி அவர் அளித்த பேட்டியில் கூறுகையில், “ரஜினிகாந்த் சாருடன் ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்பது என் நீண்ட நாள் ஆசையாக இருந்தது. அந்தக் காரணத்தினால், அந்தப் படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாட வேண்டும் என்று சொன்னதும், உடனே ஒப்புக்கொண்டேன். ரஜினி சாருடன் பணிபுரிந்த அனுபவம் எனக்கு மிகவும் சிறப்பானதாக இருந்தது.

நான் ஆடிய அந்தப் பாடல், ஜெயிலர் படத்தில் தமன்னா ஆடிய ‘காவாலா’ பாடலைப் போல இருக்காது. இது முற்றிலும் வேறு மாதிரியான பாடல். அதற்கும் இதற்கும் எந்த தொடர்பும் கிடையாது. குறிப்பாக, இந்தப் பாடலில் இடம்பெற்றுள்ள நடன அசைவுகள் அனைத்தும் மிகவும் புதியதாகவும், தனித்துவமாகவும் இருக்கும். ரசிகர்கள் தியேட்டர்களில் உற்சாகமாக கைதட்டிக் கத்துவார்கள் என்று நம்புகிறேன்,” என்று தெரிவித்துள்ளார் பூஜா ஹெக்டே.

- Advertisement -

Read more

Local News