Thursday, January 23, 2025

பல ஆண்டுகள் கழித்து மீட் செய்த வின்னர் பட காம்போ… வைரலாகும் சுந்தர் சி, வடிவேலு மற்றும் பிரசாந்த் புகைப்படம்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இயக்குநர் சுந்தர் சி, நடிகர் பிரசாந்த் மற்றும் வடிவேலு கூட்டணியில் வெளியான படம் “வின்னர்.” கடந்த 2003-ம் ஆண்டு வெளியான இந்தப் படம் அதன் காமெடி காட்சிகளால் ரசிகர்கள் மத்தியில் இன்றும் பிரபலமாக உள்ளது. இந்தப் படத்தில் வரும் வடிவேலுவின் கைப்புள்ள கதாபாத்திரத்தை யாராலும் மறக்க முடியாது.

இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் பற்றிய பேச்சுக்கள் அடிக்கடி சமூக வலைதளங்களில் எழுவது வழக்கம் தான். இதுபற்றி இயக்குநர் சுந்தர் சி, நடிகர் பிரசாந்த் ஏற்கனவே தகவல் தெரிவித்துள்ளனர். எனினும், வின்னர் 2 குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை.

இந்த நிலையில், இயக்குநர் சுந்தர் சி, நடிகர் பிரசாந்த் மற்றும் வடிவேலு சமீபத்தில் நேரில் சந்தித்து எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. இந்த புகைப்படம் சமீபத்தில் முடிந்த இயக்குநர் சுந்தர் சி பிறந்த நாளில் எடுக்கப்பட்டு புகைப்படம் என்று கூறப்படுகிறது.

னநீண்ட இடைவெளிக்கு பிறகு வின்னர் பட காம்போ ஒன்றாக புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ள நிலையில், வின்னர் 2 பற்றிய அறிவிப்பு வெளியாக வாய்ப்பு இருக்கிறதா என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும், சமூக வலைதளங்களில் பலர் வின்னர் 2 திரைப்படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று பதிவிட்டு வருகின்றனர்.

- Advertisement -

Read more

Local News