கார் ரேஸ்களில் பிசியாக இருக்கும் அஜித், சமீபத்திய நேர்காணல் ஒன்றில் தனது மனைவி, மகன், மகள் குறித்து பேசியுள்ளார். அவர் கூறுகையில்: “நான் சினிமா மற்றும் கார் ரேசில் பிசியாக இருக்கும் நேரங்களில், என் மனைவி வீடும் குடும்பத்தையும் கவனித்து வருகிறார். என் குழந்தைகளை நான் அடிக்கடி மிஸ் செய்கிறேன். அவர்களும் என்னை பல நேரங்களில் மிஸ் செய்கிறார்கள். நான் நேசிக்கும் சில விஷயங்களுக்காக சில தியாகங்களைச் செய்ய வேண்டியது அவசியமாகிறது.

என் குழந்தைகளை சினிமா அல்லது கார் ரேசிங்கில் ஈடுபட கட்டாயப்படுத்த மாட்டேன். அது அவர்கள் விருப்பம். அவர்கள் விரும்பும் விஷயத்தில் ஈடுபட நான் முழுமையாக ஆதரவு அளிப்பேன். தற்போது என் மகனுக்கு கார் ரேசில் ஆர்வம் வந்துள்ளது” எனக் கூறினார்.
ஸ்பெயின் கார் ரேசில் அஜித் அணி மூன்றாம் இடத்தைப் பெற்றுள்ளது. அதன்பின், இந்த மாதம் இரண்டு போட்டிகளிலும் அடுத்த மாதம் மேலும் இரண்டு போட்டிகளிலும் அவரது அணி பங்கேற்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.