தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் ஒரு பின்னொரு படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் பூஜா ஹெக்டே, தற்போது சூர்யாவுடன் நடித்துள்ள ‘ரெட்ரோ’ திரைப்படத்தில் தனது பணிகளை முடித்துள்ளார். இந்த படம் அடுத்த மாதம் 1-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் ‘கனிமா’ என்ற பாடல் இணையத்தில் ரசிகர்களிடையே வைரலாக பரவி வருகின்றது.

இதைத் தொடர்ந்து, பூஜா ஹெக்டே, விஜய்யுடன் நடித்துவரும் ‘ஜனநாயகன்’ திரைப்படத்தில் கதாநாயகியாகவும், ரஜினிகாந்த் நடித்துவரும் ‘கூலி’ படத்தில் ஒரு சிறப்பு பாடலுக்கு நடனமாடியிருக்கிறார். இந்நிலையில், ‘ரெட்ரோ’ படத்தின் பிரமோஷன் பணிகளில் தற்போது பூஜா ஹெக்டே தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.
இந்தப் பிரமோஷனின் போது நடைபெற்ற ஒரு சமீபத்திய பேட்டியில், அல்லு அர்ஜுனுடன் மீண்டும் இணைவது குறித்து பூஜா ஹெக்டே பேசினார். அவர் கூறியதாவது, “நல்ல கதை மற்றும் சிறப்பான கதாபாத்திரங்கள் வந்தால் நிச்சயமாக மீண்டும் இணைந்து நடிப்போம்” என்றார். இதற்கு முன் பூஜா ஹெக்டே மற்றும் அல்லு அர்ஜுன் இணைந்து நடித்த ‘வைகுண்டபுரம்’ மற்றும் ‘டிஜே’ ஆகிய படங்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தன. இதனால் தற்போது இருவரும் மீண்டும் ஒரு புதிய படத்தில் இணைவார்களா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே உருவாகியுள்ளது.